சனி, 12 மே, 2012


மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...

7 கருத்துகள்:

  1. அருமையான வலைமனை. மிக்க நன்றி! தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நேரம் கிடைக்கும்போதல்லாம் கண்டிப்பாக பதிவுகள் செய்கின்றேன்... உங்கள் ஆதரவிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வாழ்க வளத்துடன்.... பனி இனிதே தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள் 🤝

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள் 🤝

    பதிலளிநீக்கு