சனி, 26 மே, 2012


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

இப்பாடலை எங்கேயோ கேட்ட ஞாபகம் வருகின்றதா?
ஆம்... திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி பரிசில் பெற சிவபெருமான் தருமிக்கு கொடுத்தனுப்பிய பாடல் இதுதான்...

இறையனார் அவர்கள் எழுதிய இப்பாடல் குறுந்தொகை என்னும் நூளில் இடம்பெற்றுள்ளது...

விளக்கம்:

பூக்களைத் தேர்ந்து(ஆராய்ந்து) தேன் உண்ணும் அழகிய சிறகுகளை கொண்ட வண்டே, நீ சொல்வாயாக... நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக... மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

1 கருத்து:

  1. திருவிளையாடல் படத்திற்கு முன்பே நான் பெற்ற செல்வம் என்னும் படத்தில் இப்பாடல் இடம் பெறும் காட்சி வந்துள்ளது. சிவாஜிகணேசனே இறைவனாகவும், நக்கீரனாகவும் நித்துள்ள அற்புத காட்சி https://youtu.be/QLq1LoabFiY

    பதிலளிநீக்கு