ஞாயிறு, 6 மே, 2012


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...

விளக்கம்:
மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்...

18 கருத்துகள்:

  1. நன்றி என்றோ பள்ளிக்கூடத்தில் படித்தது மீண்டும் நினைவுக்கு வரச்செய்ததற்க்கு நன்றி . எத்தகைய உயர்ந்த கருத்துகளை நம் முன்னோர்களாகிய சான்றோர் வெளியிட்டு இருக்கிறார்கள் . இதில் சாற்றுங்கால் என்ற பதத்திற்கும் பட்டாங்கில் என்ற பதத்திற்கும் சரியான அர்த்தத்தை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் -விஜயகுமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது உள்ள பாடப்புத்தகத்தில் இந்த பாடல் உள்ளதா?

      நீக்கு
  2. சாற்றுங்கால் என்பது கூறுகையில் என்றும் பட்டாங்கில் என்பது வழக்கத்தில் என்றும் பொருள் என கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சாற்றுங்கால் என்பது எப்படி என்றால் என்றும் பட்டாங்கில் என்பது அற நூலில் என்றும் பொருள்

    பதிலளிநீக்கு
  4. இத goverment என்கிற செவிடன் கிட்ட செல்லுங்க,
    அப்பவாச்சும் மாற்றம் வருதா பார்க்கலாம்...
    8526262625 my whatsup

    பதிலளிநீக்கு
  5. நூளில் தவறு. நூலில் என்றல்லவா இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பதற்கான பொருள் பூனூல் இட்டார் பெரியோர் பூனூல் இடாதோர் இழிகுலத்தோர் என்னும் இழினிலை மாறவேண்டும் என்ற பொருள்பட பாடியதாக எங்கோ கேள்விப்பட்டுள்ளேன் உண்மையா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூணூல் அணிந்தவராயினும் நீதி நெறிபடி ஒழுக்கத்தோடு வாழ்வார்களானால் அவர்களும் பெரியோர்தான்.மாறாக ஒழுக்கமில்லாமலும் நீதி நெறிபடி வாழவில்லை என்றால் அவர்களும் இழி குலத்தார்தான்.நீதி நெறி என்பது மநு நீதியல்லை. அவ்வையார் சொல்லும் சமநீதி.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. எனக்கு ஒரு சந்தேகம் ஐயா!
    இதில் கீழுள்ள கருத்துப் பெட்டியில் "உங்கள் கருத்தை உள்ளிடுக..."
    என உண்டு. ஏன் "உங்கள் கருத்து" என இருந்தாலே போதுமே... தமிழைக் கொல்லுறாங்க.

    பதிலளிநீக்கு
  9. சாற்றுங்கால் - சொல்லப்போனால்
    பட்டாங்கில் - பட்டயங்களில்
    மேதினியில் - மேலான்மை செய்யப்படும் நாட்டில்
    இட்டார் - ஈதல் செய்பவர், பகிர்ந்தளிப்பவர்
    சொல்லப்போனால், நீதி வழுவா நெறிமுறையின் படி மேலாண்மை செய்யப்படும் நாட்டில், சாதி இரண்டொழிய வேறில்லை. அவை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பெரியார், அவ்வாறின்றி தாமே தமியருண்ணும் சிறியார்.

    பதிலளிநீக்கு
  10. உண்மை பொருள் "இட்டார் பெரியோர்", தன் ஆத்மா அல்லது ஜீவனை, இறைவனுக்கு அர்பணித்தவர், அர்பணிக்காதவர் இழிகுலத்தோர்

    பதிலளிநீக்கு
  11. இட்டால் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பது தனக்குரியதை பிறர்க்கு கொடுத்து உதவும் குணம் கொண்டவரை உயர்வாகவும், எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் எதுவும் கொடுத்து உதவாமல் சுயநலத்தோடு வாழ்பவர்களை தாழ்வாகவும் வகைபடுத்துவதாகும்.மனிதர்களில் பிறர்கு உதவும் குணம் கொண்டவர்கள்,மற்றும் அந்த குணம் இல்லாதவர்களை முறையே உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர் என இப்பாடல் வகைப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  12. தன்னிடம் இல்லை என்று ஒருவர் வந்து கேட்கும்போது அவருக்கு கொடுத்து உதவுவர் பெரியார் இல்லை என்று மறுப்பவர் இழிகுலத்தார்

    பதிலளிநீக்கு