பெண் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக
கல்வி இருந்த காலத்தில் அதனை
எட்டிப்பரித்து சுவைத்து
பார்த்தவர் நீ...
இயற்க்கை தந்த பருவம் என்னும் பதவியுயர்விர்க்காக
பள்ளி உனக்கு கல்வியினை
மறுத்து வீட்டுச் சிறையினில் தள்ளியபோது
சிறைதனையே பள்ளியாக்கி கல்விக்கனவினை மெய்ப்பித்தவர் நீ...
காளைகள் மட்டுமே சீறிப்பாய்ந்துகொண்டிருந்த
உயர்கல்வி என்னும் சல்லிக்கட்டில்
ஆழிப்பேரலை போல சீறிப்பாய்ந்து
வெற்றிகண்ட காமதேனு நீ...
பல்லி, கரப்பான் போன்ற சிறய உயிரினங்களை கண்டு
எட்டு அடி பின்னால் சென்ற
பெண்களுக்கு மத்தியில்
பதினாறு அடி முன்னே சென்று
மனித உயிரினை காக்க
இந்தியாவின் முதல் பெண்
மருத்துவரானவர் நீ...
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
கைம்பெண்களுக்கும்
உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் கொடுக்க
சென்னை அடையாரில் தமிழ்
மூதாட்டி அவ்வையின் பெயரில்
தொண்டு நிறுவனம் நிறுவி அன்பின் பிறப்பிடமானவள் நீ...
அரசியல் என்றால் கிலோ என்ன விலை
என்று கேட்ட பெண்கள் பலரிருக்க
ஆண் சிங்கங்களுக்கு மத்தியில்
தனியொரு பெண் சிங்கமாய்
சட்டமன்றத்திற்கு சென்ற இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் நீ...
தன்னுடைய பகைவருக்கும் வரக்கூடாது
என்று அந்நாளில் நினைக்க வைத்த
புற்றுநோய் என்னும் கொடிய
அரக்கனிடமிருந்து மனித சமுதாயத்தை மீட்டிட
சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவி
நோய்வாய்பட்டவருக்கு மறுவாழ்வு அளித்து செவிலித்தாயானவள் நீ...
அக்காலத்தில் பெண்களுக்கு
இழைத்த மிகப்பெரிய கொடுமையான
தேவதாசி என்னும் முறையற்ற பழக்கத்தை
இந்தியாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் வேருடன் களையெடுக்க
தந்தை பெரியாருடன் சேர்ந்து
போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் நீ...
இவற்றிர்க்கெல்லாம்
முத்தாய்ப்பாக...
குழந்தைகள் மற்றும் பெண்களின்
நலனுக்காக
தமிழ்நாட்டு குழந்தைகளின்
இரண்டாம் கருவறையான
சென்னை குழதைகள் நல மருத்துவமனை நிறுவி
மறுபிறவி எடுக்க வந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும்
மறுபிறவி அளித்தவர் நீ...
இவ்வளவு செயற்கரிய செயல்கள்
செய்த நீ...
இன்று மிக சிலருக்கு மட்டுமே
தெரிந்த நீ...
எனக்கு இரண்டாம் கருவறை
கொடுத்த நீ...
மருத்துவர்.முத்துலச்சுமி ரெட்டி என்கின்ற நீ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக