"திருவிளையாடல்" திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொடங்கும் வசனத்தையும் பிறகு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?
அந்த திரைப்படத்தில் வரும் வசனம்:
சிவன்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
நக்கீரன்:
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!
பொருள்: நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.
அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.
இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.
அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்
சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம்...
idhai padhivu seidhamaiku nandri...
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவிற்கு நன்றி...
பதிலளிநீக்குமிகவும் அருமை. நீண்ட நாளாக இதை நான் இணைதளத்தில் தேடிவந்தேன் !
பதிலளிநீக்குதொடபுகொள்க 09848336746 இன்னும் 16 நாளைக்கு பிறகு
பதிலளிநீக்குசிவன் தான்தோன்றி அவனுக்கு குலமில்லை
பதிலளிநீக்குசிவன் தான்தோன்றி அவனுக்கு குலமில்லை
பதிலளிநீக்குதொடபுகொள்க 09848336746 இன்னும் 16 நாளைக்கு பிறகு
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெகு நேரமாக தேடிக்கொண்டு இருத்தேன் ....பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குநக்கீரர் சொன்ன
பதிலளிநீக்கு" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "
என்ற வசனம் நக்கீரரின் அறியாமையால் வெளிப்பட்டதாகவே நான் கருதுகிறேன்....
எப்படி எனில்,
திருவிளையாடற் புராணப்படி,
சிவபெருமான் மனைவி பார்வதியின் கூந்தல் "மணம்" உடையது என்பதற்கு, சிவபெருமான் தான் சிறந்த சாட்சி....
நான் பார்வதியின் கணவன், அவளின் முடியின் வாசனைப் பற்றி எனக்கு நேரிடையாக அனுபவம் உண்டு என்பதை சொல்லவே... அவர் தன் தனிப்பட்ட அடையாளமாகிய நெற்றிக்கண்ணைத் திறந்து காண்பிக்கிறார்...
ஆக....
நக்கீரர் சொன்ன
" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே "
என்ற வசனம் நக்கீரரின் அறியாமையால் வெளிப்பட்டதாகவே நான் கருதுகிறேன்....
நக்கீரருக்கும் மனைவி உண்டு என்பதை மரவாதீர்
நீக்குஅருமை சந்தேகம் தீர்ந்தது
பதிலளிநீக்குஅருமை. பாடலும் புரிந்தது. சந்தேகமும் தீர்ந்தது.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குAham Brahmi
பதிலளிநீக்குAham Brahmi
பதிலளிநீக்கு