செவ்வாய், 6 மார்ச், 2012

பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்


பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.

தற்போதைய பொருள்:
அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது.

3 கருத்துகள்:

  1. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடைபுடிப்பான் - தவறு

    அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் - சரி

    பதிலளிநீக்கு
  2. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடைபுடிப்பான் - தவறு

    அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் - சரி

    பதிலளிநீக்கு
  3. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடைபுடிப்பான் - தவறு

    அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் - சரி

    பதிலளிநீக்கு