திங்கள், 26 மார்ச், 2012


பழமொழி: அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

சிறிது சிறிதாக நகர்த்தினால் அம்மியும் நகரும் என்பதுதான் இதற்கான பொருள். அம்மி கனமாக பொருள். அதை அவ்வளவு எளிதில் நகர்த்திட முடியாது என்பது அம்மியைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். ஏன் அம்மியை அடிக்க வேண்டும்? மூன்று நான்கு பேராக எளிதில் தூக்கி வைத்து விட்டுப் போகலாமே என்று தோன்றுகிறதுதானே.

ஆனால் இது அம்மியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தூக்கி வைக்க சொன்ன பழமொழி அல்ல.

அப்படியானால் வேறு எதற்காக சொல்லப்பட்டது?

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் பகரும்.

வீட்டின் மூலையில் பெரும்பாலான நேரங்களில் சும்மா கிடக்கும் பொருளான அம்மிக்கல் அல்லது அக்கல்லைப் போன்ற வடிவமுடைய பிற கற்களும், தேர்ந்த சிற்பி ஒருவனால் அடித்து அடித்து சிலையாக்கினால் அச்சிலைக்கு உயிர் வந்து பகரும் அதாவது பேசும் என்பதுதான் இதற்கான பொருள்.

இங்கே பகர்த்தல் என்பது பேசுவதைக் குறிக்கிறது. கண்கள் பேசுகின்றன என்பது போல் சிலை பேசும் என்பதைதான் அம்மியும் பகரும் என்று குறிப்பிடுகிறார்கள்.அழகான சிலை என்பதை விட அற்புதமான சிலை அதனுடைய ஒவ்வொரு பாகமும் எதையோ சொல்கின்றன என்பதைதான் அம்மியும் பகரும் என்றனர்.

இது போல் அறிவில்லாத ஒருவனையும் சொல்லிச் சொல்லி நல்லவனாக்க முடியும் என்பதை பழமொழியின் உட்கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

1 கருத்து:

  1. மிக அருமையான கருத்துக்களை எளிய முறையில் உலகதிற்கு பகிர்வதற்க்கு நன்றிகள் பல ���������������������� நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு